வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு ஆகஸ்ட் 5 ஆம் தேதி வாக்கு பதிவு நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 9 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஜூலை 11 ஆம் தேதியான இன்று தொடங்கியுள்ளது. வேட்பு மனுதாக்கலின் முதல் நாளான இன்று அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

Advertisment

VELLORE LOK SABHA ELECTION ADMK ALLIANCE AC SHANMUGAM NOMINATION FILLED

அதிமுக உறுப்பினராக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட அதிமுகவின் கடிதத்தோடு தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். வேட்பு மனுதாக்கலுக்கு அமைச்சர் வீரமணி தலைமையில் அதிமுகவினர் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் வந்துயிருந்தனர். ஒவ்வொரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளரும் தனது பெயரில் ஒரு வேட்பு மனுவை தாக்கல் செய்வார்கள்.

VELLORE LOK SABHA ELECTION ADMK ALLIANCE AC SHANMUGAM NOMINATION FILLED

Advertisment

அந்த மனுவுடன் மாற்று மனுவை தங்களுக்கு நெருக்கமானவர்கள் பெயரில் தாக்கல் செய்வார்கள். அதன்படி ஏ.சி.சண்முகம் தனக்கு மாற்றாக தனது மனைவி பெயரில் மனுதாக்கல் செய்யவுள்ளார் என்கிறார்கள். இன்று ஏ.சி.சண்முகத்துக்கு திருமண நாள். அதனால் காலையில் கோயிலுக்கு தனது மனைவி, மகன் மற்றும் அதிமுக பிரமுகர்கள் சிலரோடு சென்று சுவாமி தரிசனம் செய்தார். அதே மகிழ்ச்சியோடு வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.