Skip to main content

அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக திரும்பும் ஸ்லீப்பர் செல்கள்!

Published on 02/08/2019 | Edited on 02/08/2019

வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் களத்தில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த், அதிமுக கூட்டணி வேட்பாரளாக ஏ.சி.சண்முகம், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தீபலட்சுமி உள்ளிட்டோர் பிரதான வேட்பாளர்களாக உள்ளனர். இதில் திமுக மற்றும் அதிமுகவை சேர்ந்த வேட்பாளர்கள் மட்டுமே தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியை சேர்ந்தவர்கள். தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் 8 பேரும், சுயேட்சை வேட்பாளர்கள் 18 பேர் என மொத்தம் 28 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர்.

 


இதில் சுயேட்சை வேட்பாளராக களத்தில் பிரச்சாரம் செய்து வந்தவர் கோயம்புத்தூரை சேர்ந்த நூர்முகம்மது. இவர் வேட்பு மனுதாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு குதிரையில் வந்து மனுதாக்கல் செய்தார். முஸ்லிம் வாக்குகளை குறி வைத்து இவர் களமிறங்கியதாக கூறப்படுகிறது.

 

VELLORE LOK SABHA ELECTION ADMK AC SHANMUGAM SUPPORT TO INDEPENDENT CANDIDATE

 

 


சில தினங்களாக தொகுதியில் பிரச்சாரம் செய்து வந்தவர், திடீரென ஆகஸ்ட் 1ந்தேதி, அதிமுக சின்னத்தில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்தை அவரது பென்ஸ்பார்க் ஹோட்டலில் சந்தித்து, நான் பிரச்சாரம் செய்வதை நிறுத்திக்கொள்கிறேன். நான் உங்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன் எனச்சொல்லி ஆதரவு தெரிவித்துள்ளார். இது அரசியல் களத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தவில்லை என்ற போதிலும், இதன் பின்னால் ஏ.சி.சண்முகத்தின் முஸ்லிம் ஓட்டு திட்டம் உள்ளது என நம்மிடம் விளக்கினார்கள் அதிமுக தரப்பை சேர்ந்தவர்கள். அதில் தொகுதியில் உள்ள 3 லட்சம் இஸ்லாமிய ஓட்டுக்களை கவர ஏ.சி.சண்முகம் அதிமுகவுடன்  இணைந்து சில திட்டங்களை வகுத்தது எல்லாம் தோல்வியில் முடிந்துள்ளதாக கூறுகின்றனர்.

 

VELLORE LOK SABHA ELECTION ADMK AC SHANMUGAM SUPPORT TO INDEPENDENT CANDIDATE

 


இஸ்லாமிய வாக்குகளை பிரிக்க வேண்டும் என்பதற்காகவே ஏ.சி.சண்முகம் ஏற்பாட்டில் இஸ்லாமியர்கள் சிலரை சுயேட்சைகளாக தனது ஸ்லீப்பர் செல்களாக தேர்தல் களத்தில் களமிறக்கினார் என கூறப்படுகிறது. அதில் ஓருவர் தான் இந்த நூர்முகமது. இஸ்லாமிய வாக்குகளில் குழப்பத்தை ஏற்படுத்தி பிரிக்க முடியவில்லை என்றதும், திமுகவின் எதிர்ப்பு வாக்குகள் எதற்கு சுயேட்சைக்கு செல்ல வேண்டும். அது நமக்கு வரட்டுமே என திட்டமிட்டு நூர்முகமதுவை வந்து தன்னை சந்திக்க வைத்தார் ஏ.சி. சண்முகம் என்கிறார்கள். சுயேட்சைகளில் இன்னும் எத்தனை பேர் ஸ்லீப்பர் செல்களோ???

 

 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை பா.ஜ.க ரத்து செய்யும்” - மத்திய அமைச்சர் அமித்ஷா

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Union Minister Amit Shah says BJP will cancel reservation for Muslims

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

இதனையடுத்து, மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் நான்காம் கட்டமாக மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி கட்சி, பா.ஜ.க ஆகிய கட்சிகள் களம் இறங்குகிறது. அந்த வகையில், காங்கிரஸ் கட்சி தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது. 

அந்த வகையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெலுங்கானாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். அப்போது பேசிய அவர், “மஜ்லிஸுக்கு பயந்து காங்கிரசும், டி.ஆர்.எஸ் கட்சியும் தெலுங்கானா விடுதலை தினத்தைக் கொண்டாடுவதில்லை. மஜ்லிஸுக்கு பயப்படாததால் தெலுங்கானா விடுதலை தினத்தை கொண்டாடுவோம் எனப் பா.ஜ.க முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் மற்றும் டி.ஆர்.எஸ் இஸ்லாமியர்களுக்கு வழங்கிய இடஒதுக்கீட்டை ரத்து செய்து பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு பாஜக வழங்கும்.

காங்கிரஸும், டி.ஆர்.எஸ்.ஸும் ராமர் கோயில் கட்டுவதை ஒருபோதும் விரும்பவில்லை. 370வது சட்டப்பிரிவை ரத்து செய்துவிட்டு, காஷ்மீரை என்றென்றும் இந்தியாவுடன் ஒருங்கிணைத்தார் நரேந்திர மோடி. மத்திய பாஜக தலைமையிலான அரசு, 10 ஆண்டுகளில், நீண்ட காலமாக நாட்டில் நிலவி வந்த பிரச்னைகளுக்கு தீர்வு கண்டுள்ளது. சட்டப்பிரிவு 370ஐ நீக்கியதன் மூலம், காஷ்மீரை நாட்டோடு என்றென்றும் ஒருங்கிணைத்துவிட்டார் மோடி. ரகுநந்தன் ராவுக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கும் மோடியை மீண்டும் பிரதமராக்க உதவும்” என்று கூறினார். 

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.