வேலூரில் குவியும் திமுகவின் பிற மாவட்ட நிர்வாகிகள்!

வேலூர் தொகுதியில் தேர்தல் பணியாற்ற மற்ற மாவட்டங்களுக்கு ஏரியாக்களை ஒதுக்கி தந்துள்ளது திமுக தலைமை. அந்தந்த மாவட்ட மத்திய மாவட்ட செயலாளர்கள் வேலூர் மாவட்ட செயலாளரை தொடர்பு கொண்டு தொகுதிக்கு எப்போது வரட்டும் என கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் வேலூர் நாடாளமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பணிப்பொறுப்பாளர் ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் முத்துச்சாமி, ஜூலை 11 ஆம் தேதி காலை வாணியம்பாடிக்கு வருகை தந்தார். அவரோடு, சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கமும் கட்சியினரோடு வந்துயிருந்தார்.

VELLORE LOK SABHA ELECTION 2019 DMK ACTIVE

வாணியம்பாடி தொகுதியை பற்றி வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் முத்தமிழ் செல்வியிடம் தகவல்களை கேட்டு வாங்கினர். பின்பு தாங்கள் இங்கேயே தங்கி தினமும் ஒவ்வொரு வார்டுகளுக்கும் சென்று தேர்தல் பணியாற்றுவது பற்றி பேசியுள்ளனர். வெளி மாவட்டங்களில் இருந்து தேர்தல் பணிக்காக வந்துள்ள முக்கிய நிர்வாகிகளை திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் சந்தித்து சால்வை அணிவித்து வரவேற்றுள்ளார். தேர்தல் களத்தில் திமுகவினர் படு சுறுசுறுப்பாக உள்ளனர். அதிமுகவில் இதுவரை பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் யாரும் வரவில்லை. இருப்பினும் ஏ.சி.எஸ் தரும் தேர்தல் செலவுக்கான பணம் அவர்களை திக்கு முக்காட வைத்துள்ளது.

Lok Sabha election Tamilnadu vellore parliamentary constituency
இதையும் படியுங்கள்
Subscribe