Advertisment

“மு.க.ஸ்டாலினுக்கு இது ஏன் தெரியவில்லை?”- வேலூரில் கே.டி.ராஜேந்திரபாலாஜி கேள்வி!

வேலூர் மக்களவைத் தொகுதியில் உள்ள பி.கே.புரத்தில் வீதி வீதியாகச் சென்று வாக்காளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, முன்னதாக வாக்குச்சாவடி முகவர்கள், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசினார். “எந்த வாக்காளருக்கும் மாற்று கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என்ற நினைப்பே வரக்கூடாது. எடப்பாடியார் ஆட்சியில் கட்டப் பஞ்சாயத்து கிடையாது, மின்வெட்டு கிடையாது, ஜாதிக் கலவரம் கிடையாது, சட்டம் ஒழுங்கு பிரச்சினை கிடையாது, கந்துவட்டி கொடுமை கிடையாது, நில அபகரிப்பு எதுவும் கிடையாது. அனைத்து மக்களும் நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர்.

Advertisment

vellore lok electon campaign admk minster rajendra balaji said dmk mk stalin

சட்டம்-ஒழுங்கு அமைதியாக உள்ளது. இந்த ஆட்சியை தமிழக மக்கள் விரும்புகின்றனர். அதிமுக ஆட்சியில் நீடிக்கும். எடப்பாடியார் தொடர்ந்து தமிழக முதல்வராக நீடிப்பார். அதிமுக ஆட்சியை கலைக்கவே முடியாது என்று மு.க.ஸ்டாலி்னுக்கு நன்றாகவே தெரியும். இருந்தபோதிலும், ஒரு நப்பாசையில் மீண்டும் மீண்டும் முயற்சி எடுத்து வருகிறார். 2006 முதல் 2010 வரை நடைபெற்ற திமுக ஆட்சியின் அராஜகங்களை, அட்டூழியங்களை, தமிழக மக்கள் என்றும் மறக்கவோ மன்னிக்கவோ மாட்டார்கள் என்பது ஸ்டாலினுக்கு ஏன் தெரியவில்லை?” என்று கேட்டார் சூடாக.

Advertisment

minister rajendra balaji admk Lok Sabha election Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe