வேலூர் கொசப்பேட்டையை சேர்ந்தவர் உதயா என்கிற உதயகுமார். 35 வயதான உதயகுமார் வேலூரில் கிளப் நடத்திவருகிறார். கடத்தல், கட்டப்பஞ்சாயத்து, அடிதடி எனப் பல வழக்குகள் உள்ளன. ரவுடி பட்டியலிலும் பெயர் உள்ளது. கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவால் உதயா நடத்திவந்த கிளப் மூடப்பட்டுள்ளது.

rrr

இந்நிலையில் ஏப்ரல் 19-ந் தேதி மதியம் 2 மணியளவில் வீட்டில் இருந்து நண்பர்களைச் சந்திக்க தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த ஒரு ஆட்டோ, பைக்கை மறித்து நின்றுள்ளது. ஆட்டோவில் இருந்து வேகமாக இறங்கிய 4 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக உதயாவை வெட்டி வீசிவிட்டு அங்கிருந்து ஆட்டோவிலேயே தப்பியது.

Advertisment

உதயாவின் அலறலைக் கேட்டு வெளியே ஓடிவந்த மக்கள், உயிருக்கு ஒருவர் போராடிக் கொண்டுயிருப்பதைப் பார்த்து, உதயாவைக் காப்பாற்ற மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றுள்ளனர். மருத்துவர்கள் இவர் இறந்துவிட்டார் எனப் பரிசோதனைக்குப் பின் கூறியுள்ளனர்.

Advertisment

http://onelink.to/nknapp

இதுக்குறித்து தெற்கு காவல்நிலையத்திற்குத்தகவல் சொல்லப்பட, போலிஸார் வந்து உடலைக் கைப்பற்றினர். சம்பவ இடத்திற்குவந்து உயர் அதிகாரிகள் பார்வையிட்டனர். போலிஸ் தரப்பில் கூறப்படுவது, உதயகுமாருக்கு 3 திருமணங்கள் நடந்து 6 பிள்ளைகள் உள்ளனர். நான்காவதாகத் தனது நண்பரின் தங்கையைத் திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்து பழகி வந்துள்ளார். இதனைப் பெண்ணின் அண்ணனான அந்திரோஸ் எதிர்த்துள்ளார். இதனை உதயா கண்டுக்கொள்ளவில்லையாம். இந்தப் பிரச்சனையில் தான் கொலை நடந்தது என்கிறது காவல்துறை.

இந்நிலையில் இமானுவேல், நவீன்குமார், நிர்மல் அந்தியாஸ் ஆகிய 4 பேரை போலிஸார், ஏப்ரல் 20-ந் தேதி கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.