Advertisment

பாசத்தால் உயிரைவிட்ட தாய்; அதிர்ச்சியில் பலியான வடமாநிலத்தவர் 

vellore katpadi railway station incident

Advertisment

ஒரு விபத்தால் அடுத்தடுத்து இரண்டு பேர் உயிரிழந்த சோகம் வேலூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர் காஞ்சனா. கணவனை இழந்த இவருக்கு 25 வயதில் ஆனந்த் என்ற ஒரு மகன் உள்ளார். சமீபத்தில் திருச்சிக்கு சென்ற ஆனந்த பைக் விபத்தில் ஒன்றில் சிக்கி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து மிகுந்த மன வேதனையில் இருந்த காஞ்சனா யாரிடமும்எதுவும் பேசாமல் மிகுந்தமன அழுத்தத்தில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் காஞ்சனா நேற்று காலை யாரிடமும் எதுவும் சொல்லாமல் காட்பாடிரயில் நிலையம் வந்துள்ளார். அப்போது அந்த நேரத்தில் பெங்களூருவில் இருந்து வந்த வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலில் விழுந்து தற்கொலை செய்துள்ளார். இதனைப்பார்த்து ரயிலில் இருந்த பயணிகளும், ரயில் நிலையத்தில் இருந்தவர்களும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் காஞ்சனா ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொண்டதை நேரில் பார்த்த ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

Advertisment

மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த ராம்கிருபா(54) தனது குடும்பத்துடன் வேலூருக்கு சுற்றுலா வந்திருந்த நிலையில், மீண்டும் தனது குடும்பத்துடன் மத்தியப்பிரதேசத்திற்கு செல்வதற்காக காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். இந்த நிலையில் தான் காஞ்சனா ரயிலில் குதித்து தற்கொலை செய்து கொண்டதை நேரில் பார்த்த அதிர்ச்சியில் மாரடைப்பால் உயிரிழந்தார். அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த மூன்று சம்பவத்தால் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

railway Vellore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe