Published on 19/12/2021 | Edited on 19/12/2021

கடந்த 15ஆம் தேதி வேலூர் தோட்டப்பாளையத்தில் உள்ள தனியார் நகைக் கடையான ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடையில், கடையின் பின்பக்க சுவரை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர் நகைகளை திருடிய சம்பவம் நடைபெற்றிருந்தது. இதுதொடர்பாக போலீசார் 8 தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அக்கடையில் 15 கிலோ தங்கம், வைரம் உள்ளிட்ட நகைகள் கொள்ளை போனதாக தகவல்கள் வெளியானது. கொள்ளை தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக அணைக்கட்டு பகுதியை அடுத்த குச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த டி.கா.ராமன் என்ற 28 வயது இளைஞரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.