சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது.

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் நகரம் அய்யம்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள். ரேணுகா கார்த்திக் தம்பதியரின் பத்து வயதில் மகள் உள்ளார். அங்குள்ள பள்ளியில் படித்து வருகிறார்.

vellore incident

அதே குடியிருப்பில் கல்யாணம் ஆகாத 45 வயதான சம்பத் என்பவரும் வசித்து வருகிறார். காலாண்டு விடுமுறையை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஐந்தாம் வகுப்பு படிக்கும் குறிப்பிட்ட சிறுமி வீட்டில் இருந்துள்ளார்.

ஆள் இல்லாத நேரம் பார்த்து அந்த சிறுமியிடம் அவ்வப்போது பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளான் சம்பத். பள்ளி சிறுமிக்கு அடிக்கடி வயிற்று வலி வரவே சந்தேகமடைந்த பெற்றோர் சிறுமியை விசாரிக்கவே உண்மையை கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவனிடம் கேட்க அலட்சியமாக பதில் கூறியுள்ளான்.

இதில் இன்னும் கோபமான சிறுமியின் பெற்றோர் அதனை திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். சம்பத்தை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

arrest Vellore
இதையும் படியுங்கள்
Subscribe