Advertisment

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த நூலகர்... காப்பற்ற முயன்ற பெண் போலீஸ்... போராட்டத்தில் இறங்கிய மாணவர்கள்...!

வேலூர் மாவட்டம் வேலூர் மாநகரத்தில் உள்ள தொரப்பாடி பகுதியில் இயங்கிவருகிறது ஈவேரா அரசு பாலிடெக்னிக் கல்லூரி. இதில் ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு பயிலும் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டைச் சார்ந்த மூன்று மாணவிகள் சில தினங்களுக்கு முன்பு வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றினை தந்துள்ளனர்.

Advertisment

Vellore  incident - police investigation

அதில் தங்களது கல்லூரியில் பணியாற்றும் நூலகர் தாமோதரன் பாலியல் ரீதியாக தங்களுக்கு தொல்லை தருகிறார். யாரும் இல்லாத நேரத்தில் நூலகத்தை சுத்தம் செய்ய வேண்டும் என வரச்சொல்லி, பாலியல் ரீதியாக துன்புறுத்துகிறார் என புகார் எழுதி தந்துள்ளனர். இந்தப் புகாரை மகளிர் காவல் நிலைய அதிகாரிகள் காவலர்கள் விசாரணை நடத்தாமலேயே மாணவிகளை இது எல்லாம் ஒரு புகாரா எனச் சொல்லி அனுப்பி வைத்து விட்டனர்.

அதனைத்தொடர்ந்து அந்த மாணவிகள் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன்குமார் அலுவலகத்துக்குச் சென்று அங்கும் இதே மனுவை தந்துள்ளனர். அந்த மனு வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வந்துள்ளது. இதையடுத்து மாணவிகளை அழைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள், மேலிடத்தில் புகார் கொடுத்ததற்காக மிரட்டியுள்ளனர். இதனால் அந்த மாணவிகள் அழுதபடியே காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்துள்ளனர். இதனை தங்களது சக மாணவ மாணவிகளிடம், பாதிக்கப்பட்ட மாணவிகள் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இதனை கேள்விப்பட்டு அதிர்ச்சியாகி மார்ச் 17ந்தேதி காலை மாணவர்கள் கல்லூரிக்கு வெளியே சாலை மறியலில் ஈடுபட்டனர். 500 க்கும் அதிகமான மாணவர்கள் இந்த சாலை மறியலில் ஈடுபட்டிருந்தனர். கரானா வைரஸ் பரவலால் கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டு இருந்த சமயத்திலும் மாணவர்கள் திரண்டு வந்திருந்தது போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

சமூக நலத்துறை அதிகாரிகள், கல்லூரி முதல்வர், காவல்துறையினர் என குழுவாக வந்து சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கல்லூரி நூலகர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என மாணவர்கள் கூறினர். விசாரித்து நடவடிக்கை எடுக்கிறோம் என காவல்துறை அதிகாரிகள் உறுதிமொழி வழங்கினார். அதன்பின் சமூக நலத்துறை அதிகாரிகள் உடன் மீண்டும் அனைத்து மகளிர் காவல் நிலையம் சென்று பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் தந்தனர். இந்தப் புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், தாமோதரனை அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் உயர் கல்வித்துறை அலுவலகம் புகாருக்கு உள்ளான தாமோதரனை தற்காலிக நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

Advertisment

Investigation police Vellore
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe