வேலூர் மாநகரம் தோட்டப்பாளையத்தை சேர்ந்தவர் அசோக். இவரை ஏப்ரல் 6ந்தேதி அரியூரில் வைத்து சில இளைஞர்கள் சேர்ந்து, அடித்து கொலை செய்து விட்டு தப்பி சென்றுவிட்டனர். இதுப்பற்றி அரியூர் போலீஸாருக்கு தகவல் கிடைக்க அவர்கள் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
“அரியூரை சேர்ந்த சதிஷ் என்பவருக்கு அசோக்குமார் பணம் தந்துள்ளார். அந்த பணத்தை திருப்பி வாங்க சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த ரவுடிகள் எம்.எல்.ஏ. ராஜா, சேம்பர் ராஜா, சதிஷ் உட்பட 4 பேர் சேர்ந்து அசோக்குமாரை சரமாரியாக தாக்கிவிட்டு சென்றுள்ளனர். உடன் சென்ற நண்பர்கள் அசோக்குமாரை, பைக்கில் உட்கார வைத்து வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்க்க முயல, மருத்துவர்கள் ஏற்கனவே அவர்இறந்தவிட்டதாக கூறியுள்ளனர்” எனபோலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்ட அசோக், ரவுடி வசூர் ராஜாவின் கேங்க்கில் இருப்பவன். கொலை செய்ததும் அதே குரூப் என தெரிகிறது. எதற்காக கொலை செய்தார்கள் என விசாரணை நடத்தினால் இதன் பின்னால் வேறு ஏதாவது விவகாரம் உள்ளதா என்பது தெரியரும் என்கிறார்கள் போலீஸ் தரப்பிலேயே மற்றொரு பிரிவினர்.