வேலூர் கோட்டைக்குள் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை...!

வேலூரை அடுத்த கிராமத்தைச் சேர்ந்தவர் 24 வயதான இளம்பெண். வேலூரில் உள்ள பிரபல தனியார் துணிக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். அதே கடையில் வேலை பார்த்துவந்த ஒரு இளைஞரிடம் பழகியுள்ளார். பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. கடந்த ஜனவரி 18ந்தேதி இரவு 9 மணியளவில் தன்னுடைய காதலனுடன் இந்த கோட்டை பகுதியின் ஒருயிடத்தில் உட்கார்ந்து ஜாலியாக, பேசிக்கொண்டு இருந்தாக கூறப்படுகிறது.

Vellore incident

அப்போது 3 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்து காதலர்களை சூழ்ந்து நின்றுள்ளது. பிறகு அந்த பெண்ணை கோட்டைக்குள் மறைவான இடத்தில் வைத்து, கத்திமுனையில் மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கிளம்பி செல்லும்போது, அந்த இளம்பெண் கழுத்தில் போட்டிருந்த நகைகளையும் பறித்து கொண்டு 3 பேரும் தப்பிவிட்டனர் எனவும் கூறப்படுகிறது.

அந்த பெண்ணால் நடக்க முடியாமல் தடுமாற அழுத அந்த காதலன், ஆபத்தான நிலையில் தனது காதலியை வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு சென்று சேர்த்ததாகவும் இளம்பெண்ணை சீரழித்து தப்பியோடிய மூன்று பேரில் ஒருவரை வேலுார் வடக்கு போலீசார் கைது செய்துள்ளதாகவும், மற்ற மற்ற 2 பேரையும் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதுப்பற்றி வடக்கு காவல்நிலையத்தில் விசாரித்தால், பதில் சொல்ல மறுக்கின்றனர். டிசம்பர் 19ந்தேதி காலை வடக்கு காவல்நிலையத்துக்கு வந்த எஸ்.பி பிரவேஷ்குமார், இதுதொடர்பாக வேலூர் டி.எஸ்.பி, ஆய்வாளரிடம், தகவல்களை கேட்டுவிட்டு, அவர்களை பிடிப்பது தொடர்பாக ஆலோசனை வழங்கிவிட்டு சென்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வேலூரின் மையப்பகுதியில், வரலாற்று புகழ்வாய்ந்த கோட்டை பகுதியில் ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் வேலூர் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

police Vellore
இதையும் படியுங்கள்
Subscribe