இரவு பணிக்கு சென்ற ரயில்வே ஊழியர் சடலமாக மீட்பு..

வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பாச்சூர் ரயில்நிலையத்தில் வடமாநிலத்தை சேர்ந்த சுஜித் கான் என்பவர் தனியார் ரயில்வே ஒப்பந்த பணியாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நவம்பர் 4 ந்தேதி இரவுப்பணிக்காக பச்சூர் ரயில் நிலையத்தில் இருந்துள்ளார். நவம்பர் 5 ந்தேதி ரயில்வே இரயில் நிலையத்துக்கு அருகில் தண்டவாளம் ஓரம் இறந்து கிடந்துள்ளார்.

vellore incident

இதைப்பற்றிய தகவலை பொதுமக்கள் பார்த்து சொல்ல இரயில் நிலைய அதிகாரிகள் வந்து பார்த்துவிட்டு ரயில்வே போலீஸாருக்கு தகவல் கூறியுள்ளனர். தகவலறிந்து வந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ரயில்வே போலிஸார் இறந்தவர் தலை துண்டித்து தனியாக கிடப்பதால் இது கொலையா? தற்கொலையா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

accident Southern Railways Vellore
இதையும் படியுங்கள்
Subscribe