Advertisment

தண்ணீர் தொட்டியில் விழுந்து 4 வயது குழந்தை உயிரிழப்பு

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வீராங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வபாண்டியன் என்கிற வீரமணி. இவரது மனைவி ரம்யா. செல்வபாண்டியன் வீராங்குப்பம் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக இருந்துள்ளார்.

Advertisment

vellore inicdent

இந்த தம்பதியிருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் நடுக்குழந்தைக்கு 3 வயதாகிறது. இன்னும் பள்ளியில் சேர்க்கவில்லை. நவம்பர் 1ந்தேதி காலை வீட்டில் விளையாடிக்கொண்டு இருந்தபோது 3 வயது யுவந்திகா, வீட்டில் தண்ணீர் பிடித்து வைத்திருந்த தண்ணீர் ட்ரம்முக்குள் விழுந்து உயிர்விட்டதாக தெரிகிறது.

விளையாடிக்கொண்டுயிருந்த குழந்தை காணவில்லை என தேடிய தாயின் கண்ணில் ட்ரம்மில் குழந்தை மூழ்கி இறந்துயிருப்பதை பார்த்து அதிர்ச்சியாகியுள்ளார். அவர் கத்தி அழ அக்கம் பக்க வீட்டினர் வந்து குழந்தையை வெளியே எடுத்துள்ளனர். இதுப்பற்றி காவல்நிலையத்தில் சொல்லப்பட ஆம்பூர் கிராமய காவல்நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Vellore incident
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe