Advertisment

பாட்டியை கொலை செய்த கொள்ளு பேரன்கள்...போலீஸார் விசாரணை!!

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கொல்லமங்கலம் கிராமத்தில் உள்ள தனது வீட்டில் தனியாக வசித்து வந்தவர் 80 வயதான மூதாட்டி ராஜம்மாள். இவரிடம் பணம் மற்றும் நகை இருந்துள்ளது. இந்நிலையில் அவர் அக்டோபர் 31ந்தேதி காலை கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இதனால் அக்கிராம மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Advertisment

vellore incident

இதுப்பற்றி போலீஸாருக்கு தகவல் சொல்ல ஆம்பூர் கிராமிய காவல்நிலைய காவல்துறை அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட பாட்டியின் கொள்ளு பேரன்கள் மோனிஷ், பிரீஸ்வால் இருவரும் கொலை செய்தது தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

Advertisment

பாட்டியிடம் உள்ள பணம் மற்றும் நகைக்காக, அவரின் முகத்தில் ஸ்பிரே அடித்து மயக்கம் போடவைத்து, கத்தியால் குத்தி கொலை செய்ததாக கூறப்படுகிறது. கொலை செய்துவிட்டு தப்பியவர்கள் போலிஸ் வந்தபின், எதுவும் நடக்காதது போல் அங்கு வந்து இருந்துள்ளார்கள். சந்தேகத்தின் பேரில் போலீஸார் பிடித்து விசாரணை நடத்தியபோது இந்த தகவல் தெரியவந்ததாக கூறப்படுகிறது.

vellore incident

அவர்களை காவல்நிலையம் அழைத்து வந்து, உண்மையில் பணம், நகைக்காக தான் இந்த கொலையை செய்தார்களா ? அல்லது வேறு ஏதாவது குடும்ப தகராறு, சொத்து தகராறு உள்ளதா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

incident arrest Vellore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe