Advertisment

நாட்டு துப்பாக்கியால் சுடப்பட்ட முதியவர் மருத்துவமனையில் அனுமதி...

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பகுதியை சேர்ந்தவர் மணி என்கிற 65 முதியர். இவர் ஆலங்காயம் ஏரிக்கரை பகுதியில் தனது மாடுகளை மேய்க்க மலைப்பகுதிக்கு ஓட்டிச்சென்று மேய்த்துக்கொண்டு இருந்துள்ளார்.

Advertisment

vellore incident

காலை 11 மணியளவில் திடீரென நாட்டுத் துப்பாக்கி வெடித்துள்ளது. மணியின் உடலில் வந்து நாட்டு துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளன. அவருடைய உடலில் 10 இடங்களில் சுடப்பட்டு காயங்கள் ஏற்பட்டுள்ளது. அவரது அலறல் சத்தம் கேட்டு மேய்ச்சலுக்கு ஆடு, மாடுகளை ஓட்டிவந்தவர்கள் ஓடிவந்து பார்த்து அவரை தூக்கிக்கொண்டு வந்து ஆம்புலன்ஸ் மூலமாக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மணியின் உடலில் இருந்து 5 குண்டுகள் எடுக்கப்பட்டுள்ளது. இதுக்குறித்து ஆலங்காயம் போலீசார் வழக்கு பதிவு செய்து, வெடித்தது யாருடைய நாட்டு துப்பாக்கி ?, சுட்டது யார் ? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

கடந்த வாரம் வேட்டைக்கு சென்றவர்கள் ஒரு இளைஞரை சுட அவர் இறந்துள்ளார், அதில் இன்னும் சிலர் கைது ஆகாமலே உள்ளனர். இந்நிலையில் அடுத்த துப்பாக்கி சூடு என்பதால் போலீஸார் நொந்துப்போய்வுள்ளனர்.

GunShot Vellore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe