Advertisment

கன்றுக்குட்டியை அடித்துக் கொன்ற சிறுத்தை... பொதுமக்கள் அச்சம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சாமர்ச்சிகுப்பம் வனப்பகுதியை ஒட்டிய இடத்தில் அமுதா என்பவருக்கு சொந்தமாக வீடு உள்ளது. வீட்டின் அருகே கொட்டகையில் பசுமாடு மற்றும் கன்று குட்டியை கட்டி வைத்திருந்துள்ளார். அவைகளை சிறுத்தை அடித்துக் கொன்று இருக்கிறது.

Advertisment

இறந்த உடலை கைப்பற்றிய வனத்துறையினர் உதவி வனப்பாதுகாவலர் ராஜ்குமார் தலைமையில் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு துப்பாக்கியுடன் வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு சிறுத்தை பிடிக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த சம்பவத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளன.

Advertisment

vellore forest area leopard peoples shock

சிறுத்தை தாக்கி பசு, கன்று கொல்லப்பட்டதை படம் எடுக்க, செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்களை வனப்பகுதிக்குள் வனத்துறையினர் அனுமதிக்க மறுத்தனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

forest area leopard peoples Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe