வேலூர் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, அங்கு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. ஆகவே, தேர்தல் நடைபெற உள்ள வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம், கே.வி.குப்பம், ஆம்பூர், வாணியம்பாடி உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் வரும் 3-ந் தேதி காலை 10 மணி முதல் 5-ந் தேதி இரவு 12 மணி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும், வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள ஆகஸ்டு 9-ந் தேதியும் மதுபானக் கடைகள் மூடப்படும். மேலும் மதுபானக் கடைகளையொட்டி அமைந்துள்ள பார்களும் மூடப்படுகிறது. மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள 4 நாட்களும் மது விற்பனை செய்வது மற்றும் மதுபானங்கள் பரிமாற்றம் செய்வது தெரியவந்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });