வேலூரில் வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கவிருக்கின்ற நிலையில் தற்போது தேர்தல்பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. அத்தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் திமுக பொருளாளர் துரைமுருகன்மகன் கதிர் ஆனந்தைஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின்தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
அதற்கான தேர்தல் சுற்றுப்பயண தேதிகள் திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி27. 07. 2019ல் கே.வி.குப்பம் பகுதியிலும், 28.07.19ல் வாணியம்பாடி பகுதியிலும், 02.08.19 அணைக்கட்டு பகுதியிலும்பிரசாரம் மேற்கொள்ள உள்ளார் திமுக தலைவர்ஸ்டாலின்.