வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தலில், நாங்கள் போட்டியிடவில்லை, கட்சிக்கு நிரந்தர சின்னம் வாங்கியபின் தான் இனி வரும் இடைத்தேர்தல்களில் போட்டி எனச்சொல்லி ஒதுங்கிவிட்டார் அக்கட்சியின் பொதுச்செயலாளரான டி.டி.வி தினகரன்.

v

Advertisment

தினகரன் சொன்னது உண்மையான காரணமில்லை. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தலிலில் முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் போட்டியிட்டார். இப்போது யாரும் போட்டியிட முன்வரவில்லை. அதற்கு காரணம், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அமமுக படுதோல்வி அடைந்ததால் தொண்டர்கள் விரக்தியாகினர்.

Advertisment

அதோடு, அந்த கட்சியில் இருந்து பலரும் விலகி அதிமுக, திமுக என பயணமானார்கள். வேலூர் மாவட்டத்தில் அமமுகவின் பிரபலங்களாக, கட்சியின் முக்கிய நிர்வாகிகளாக இருந்த முன்னாள் எம்.எல்.ஏக்களான நீலகண்டன், ஞானசேகரன், வாசு, சிவசங்கர் போன்றவர்கள் மாறிவிட்டார்கள். இதனால் அங்கு போட்டியிட யாரும் முன்வரவில்லை.

யாரும் போட்டியிடாததால் அமமுக வாக்குகள் யாருக்கு என்கிற கேள்வி எழுந்துள்ளது. இதுப்பற்றி விசாரித்தபோது, அமமுக வாக்குகள் என்பது அதிமுகவின் வாக்குகள். அதிமுகவில் கடந்த காலத்தில் பொறுப்பில் இருந்தவர்கள், அவர்கள் தான் பிரிந்து சென்று தினகரன், தீபா பின்னால் அணிவகுத்தவர்கள். அவர்கள் யாரும் வெளியில் இருந்து வந்தவர்கள் கிடையாது. அதனால், அவர்கள் வாக்குகளை சுலபமாக அதிமுகவினரால் இழுக்க முடிந்துள்ளது. அமமுகவினர், இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும் என்பதற்காக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் ‘பலமாக கவனிப்பு’ செய்துள்ளார். ஆக அந்த வாக்குகள் அதிமுக சின்னத்துக்கே விழுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றார்.