Advertisment

தமிழகத்தில் மதவாத சக்திகளுக்கும், பிரிவினைவாதிகளுக்கும் இடமில்லை- கதிர் ஆனந்த் எம்.பி பேச்சு!

வேலூர் பாராளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட டி.எம்.கதிர் ஆனந்த் அதிமுக சின்னத்தில் போட்டியிட்ட ஏ.சி.சண்முகத்தை 8100 க்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

Advertisment

வெற்றி பெற்றதை தொடர்ந்து அவர் வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட ஆலங்காயம் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளான தேவஸ்தானம், தும்பேரி, மாதகடப்பா, ஜாப்ராபாத், மதனாஞ்சேரி, இளையநகரம், மேல்குப்பம், செக்குமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வாக்காளர்களுக்கு நன்றியை தெரிவித்து இனிப்பு வழங்கினார்.

vellore dmk mp kathir anand meet peoples

அப்போது, அங்கிருந்த மக்களிடம் அவர் பேசுகையில், இந்தத் தேர்தலில் இரண்டு விஷயங்களை நிருபித்துள்ளது. தமிழகத்தில் மதவாத சக்திகளுக்கும், பிரிவினைவாதிகளுக்கும் இடமில்லை, அதே நேரத்தில் தமிழ்நாடு என்றும் திமுகவின் கோட்டை என்று நிரூபிக்கக் கூடிய வகையில் வேலூர் தேர்தல் அமைந்துள்ளது.அதேபோல்தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றக்கூடிய வகையில் குடிநீர் பிரச்சினை, சாலை வசதிகள், சுகாதார வசதிகள், உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தருவேன் என்றார்.

peoples Meet MP kathir anand Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe