vellore district women doctor incident police investigation

வேலூரில் ஆண் நண்பருடன் ஆட்டோவில் பயணித்த பெண் மருத்துவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த ஐந்தாவது நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

பெண் மருத்துவர் ஒருவர் தனது ஆண் நண்பருடன் திரையரங்கிற்கு சென்றுவிட்டு, நள்ளிரவு ஒரு மணிக்கு ஆட்டோவில் திரும்பியுள்ளார். அப்போது ஆட்டோவில் ஏறிய நான்கு பேர், பெண்ணையும், அவருடன் வந்த நண்பரையும் கத்தியைக் காட்டி மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

பின்னர், கத்தி முனையில் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கும்பல், செல்போன் மற்றும் ரூபாய் 40,000 ரொக்கம் உள்ளிட்டவற்றை வழிப்பறி செய்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் கொடுத்த புகார் அடிப்படையில், இரண்டு சிறுவர்கள் உள்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தலைமறைவாக இருந்த மற்றொரு நபரும் காவலர்களிடம் பிடிப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து செல்போன், பணம் மற்றும் அவர்கள் பயன்படுத்தியஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Advertisment