Advertisment

டூவீலரில் ஆந்திராவுக்கு கடத்திய ரேசன் அரிசி பறிமுதல்

வேலூர் மாவட்டத்தில் இருந்து ஆந்திரா, கர்நாடகாவுக்கு கடத்தல்காரர்கள் ரேசன் அரிசி தினமும் பல வழிகளில் கடத்துகின்றனர். இதனை காவல்துறை, உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு என எதுவும் கண்டுக்கொள்வதில்லை என்கிற குற்றச்சாட்டு உள்ளது.

Advertisment

இந்நிலையில் வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு ரேஷன் அரிசியை இரு சக்கர வாகனங்களில் கடுத்துவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் ஷம்சுத்தீன் தலைமையில் அதிகாரிகள் வாணியம்பாடி ஆந்திரா சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

அப்போது அவ்வழியாக இரண்டு இருசக்கர வாகனங்கள் வேகமாக சில மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்தன. இருசக்கர வாகனத்தை மடக்கி சோதனை செய்ய முயற்சித்தனர். அப்போது கடத்தல்காரர்கள் இருசக்கர வாகனத்தை விட்டு விட்டு தப்பி ஓடினர். அந்த வண்டிகளின் அருகில் சென்று இரண்டு இருசக்கர வாகனத்தில் இருந்த மூட்டைகளை சோதனை செய்தபோது அதில் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. மொத்தமாக சுமார் 100 கிலோ ரேஷன் அரிசி மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய இருவரை தேடி வருகின்றனர்.

அந்த இரண்டு வண்டிகளின் பதிவெண்ணை கொண்டு வாகன உரிமையாளரிடம் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

rice
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe