Advertisment

வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிப்பு- சுதந்திர தின விழா மேடையில் எடப்பாடி அறிவிப்பு!

சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.

Advertisment

சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் பழனிசாமி தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். இந்த விழாவில் அமைச்சர்கள் கலந்துகொண்டு தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தினர். மூன்றாவது முறையாக கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்திய பிறகுமுதல்வர் எடப்பாடிபழனிசாமி அதன்பிறகு மக்களுக்காக உரையாற்றினார்.

Advertisment

eps

அனைவருக்கும் 73-வது தின சுதந்திர தின வாழ்த்துக்கள். போற்றுதலுக்கும், மரியாதைக்கும் உரிய சுதந்திரத்தை பெற்றுத்தந்தபோராட்டத் தலைவர்களை நினைவில் கொள்ளவேண்டிய நாள் இன்று.தமிழக மக்களின் ஆதரவுடன் மூன்றாவது முறையாக கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றியதில் பெருமிதம் அடைகிறேன்.

eps

அண்ணல் காந்தியடிகள் சுதந்திர போராட்டத்திற்கு தலைமை ஏற்று அறவழியில் எதிர்த்துப் போராடி நம் நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுத் தந்தார். ஆங்கிலேயர்களை நம் மண்ணில் இருந்து அகற்றி அடிமைத்தனத்தை தகர்த்தெறிய நடைபெற்ற போராட்டத்தில் தன் நாட்டின் பங்கு மகத்தானதாகும். அந்நியரிடமிருந்துஇருந்து நம் தாய் மண்ணை காக்க இன்னுயிர் நீத்த பொதுமக்கள் எண்ணில் அடங்காதவர்கள். அவர்கள் தியாகத்தை போற்றும் அதேவேளையில் அவர்களுக்கு மரியாதை செலுத்துவது நமது கடமை.

தமிழகத்தில் இந்தியை திணிக்க கூடாது. இந்தி பேசாத மாநிலங்கள் மீது இந்தி திணிக்க கூடாது.இரு மொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகியவற்றை தலைமையிடமாகக் கொண்டு மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட இருக்கிறது. சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு ஓய்வூதியம்15 ஆயிரத்திலிருந்து 16 ஆயிரமாக உயர்த்தப்படும் என்றார்.

Chennai edappadi pazhaniswamy independence day. Vellore
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe