Advertisment

என் கல்விக்கு உதவி செய்ங்க - நிதியுதவி தந்த காந்தி

வேலூர் மாவட்டம், வாலாஜா ஒன்றியத்தை சேர்ந்தவர் துரைசாமி. இவரது குடும்பம் ஏழை விவசாய குடும்பம். இவரது மகள் சிவராஞ்சனி. இவர் நன்றாக படிக்கக்கூடியவர். இவர் மேற்படிப்பு மேற்கொள்ள நிதியுதவி வேண்டும் என தங்களது இராணிப்பேட்டை தொகுதி எம்.எல்.ஏவும், திமுக கிழக்கு மா.செவுமான காந்திக்கு கோரிக்கை மனு தந்திருந்தார்.

Advertisment

VELLORE MLA

இந்த மனு அவரது பார்வைக்கு வந்ததும், அவரது ஏழ்மை நிலையை கட்சியினரை வைத்து விசாரணை நடத்தி உடனடியாக அந்த மாணவியை தனது அலுவலகத்துக்கு மே 27ஆம் தேதி அன்று வரவழைத்து அரசு மூலமாகவோ, எம்.எல்.ஏ நிதி மூலமாகவோ செய்ய முடியாது என்றும், அதனால் எங்களது குடும்பத்தார் நடத்தும் ஜீ.கே கல்வி அறக்கட்டளையில் இருந்து நிதி உதவி தருகிறேன் எனக்கூறி அவரது கல்வி கட்டண செலவான ரூ.45,000 க்கான காசோலையை வழங்கினார். வேறு ஏதாவது உதவிகள் வேண்டுமானாலும் கேளும்மா எனச் சொல்லி அனுப்பி வைத்துள்ளார்.

Advertisment

GANDHI MLA Vellore Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe