வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேவூர் ரயில் நிலையத்தில் அக்டோபர் 7 ந்தேதி காலை 10.00 மணிக்கு நின்றுக்கொண்டு இருந்த சரக்கு ரயில் மீது ஒரு வாலிபர் ஏறியுள்ளார். இதில் இளைஞர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி ஏறியப்பட்டார்.
உடல் முழுவதும் தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞரிடம், ரயில்வே நிலைய அதிகாரிகள் விசாரித்த போது அவர் வட மாநில இளைஞர் என தெரியவந்தது. அந்த இளைஞரை மீட்டு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மேலும் காயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் யார்? எந்த ஊர்? என காட்பாடி ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.