வேலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு களவு போன பொருட்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு நேற்று(30ம் தேதி) சந்துவாச்சாரியில் உள்ள வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் களவு போய் மீட்கப்பட்ட 225 கிராம் தங்கம், ஒரு கிலோ வெள்ளி, 7 நான்கு சக்கர வாகனங்கள், 70 இருசக்கர வாகனங்கள், 150 செல்போன்கள் என சுமார் 3 கோடியே 8 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் அடங்கும்.இவற்றை வேலூர் காவல் சரக DIG முனைவர் முத்துசாமி, வேலூர் SP மணிவண்ணன் ஆகியோர் வழங்கினர். தாங்கள் பறிகொடுத்த பொருட்களை மீண்டும் பெற்றுக்கொண்ட மக்கள் காவல் துறைக்கு தங்கள் நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.
மக்களுக்கு வேலூர் மாவட்ட காவல் துறை கொடுத்த இன்ப அதிர்ச்சி
Advertisment