Advertisment

பி.ஆர்.ஓ வேலை வாங்கி தருவதாக 15 லட்சம் மோசடி - ஓவிய ஆசிரியர் கைது

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அடுத்த பார்த்தபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கலையரசன். இவர் அரசு வேலைக்காக முயற்சி செய்துகொண்டு இருந்தார். பணம் தந்தாவது வேலை வாங்கிவிட வேண்டும் என்கிற முயற்சியில் இறங்கியிருந்தார்.

Advertisment

இதனை அறிந்த அரசு உயர்நிலைப்பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றும் கமலக்கண்ணன், எனக்கு தெரிந்த இருவர், அதிமுகவை சேர்ந்த பெரும் புள்ளிகளிடம் நெருக்கமான தொடர்பில் உள்ளார்கள். தற்போது அரசாங்கத்தில் மக்கள் தொடர்பு அலுவலர் பணி நிரப்பப்படுகிறது. இதற்கு தேர்வெல்லாம் கிடையாது. 20 லட்ச ரூபாய் செலவாகும். அதை தந்தால் வேலை நிச்சயம் எனச்சொல்லி தனது நண்பர்களான ராகேஷ்கண்ணா, சந்திரபோஸ் ஆகிய இருவரை அறிமுகம் செய்துள்ளார்.

Advertisment

a

4 தவணைகளாக 15 லட்ச ரூபாயை கமலக்கண்ணன் மூலமாக ராகேஷ்கண்ணா, சந்திரபோஸிடம் தந்துள்ளார் கலையரசன். பணம் தந்து மாதங்கள் போனதே தவிர பணி கிடைக்கவில்லை. இந்நிலையில் இரண்டு மாதத்துக்கு முன்பு, இந்தா உன் பணியாணை, வேலையில் சேர்ந்துக்கொள் என ஆர்டர் காப்பி ஒன்றை தந்துள்ளனர்.

அதை வாங்கி பார்த்தபோது, அது போலியான ஆணை எனத்தெரிந்து அவர்களிடம் நியாயம் கேட்டுள்ளார். அவர்கள் இவரை மிரட்டியுள்ளனர். இதில் அதிர்ச்சியான கலையரசன், அவர்கள் மீது ஆம்பூர் காவல்நிலையத்தில் புகார் தந்துள்ளார். புகாரை வாங்கி, பணம் வாங்கி ஏமாற்றியதற்கான ஆவணங்கள் இருந்ததால் ஓவிய ஆசிரியர் உட்பட மூவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் போலிஸார்.

வேலை வாங்கி தருவதாக கூறி வேலூர் மாவட்டத்தில் இப்படி பல கும்பல்கள் சுற்றி வருகின்றன என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

arrest
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe