vellore district news

Advertisment

வேலூர் மாநகரம் அண்ணாசாலையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு எதிரே ஆட்டோவை நிறுத்திய சிலர், உள்ளிருந்து ஒரு உடலை கீழே இழுத்து வீசிவிட்டு மின்னல் வேகத்தில் சென்றுவிட்டுள்ளனர். இதனைப்பார்த்த அப்பகுதி கடைக்காரர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியாகி போலீஸுக்கு தகவல் கூறியுள்ளனர். மேலும் கடைக்காரர்கள் பயந்துப்போய் கடையை மூடிக்கொண்டு கிளம்பியுள்ளனர்.

வேலூர் ஏ.எஸ்.பி ஆல்பர்ட் ஜான் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தியதில் கொலை செய்யப்பட்டது தற்போது கொணவட்டத்தில் வசிக்கும் 30 வயதான சாலமன் என்பது தெரியவந்துள்ளது. இவன் மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கு உள்ளது. இவனை யார் கொலை செய்தது, எதற்காக கொலை செய்தார்கள், கொலை செய்த இடத்தில் இருந்து இங்குவந்து உடலை வீச வேண்டிய அவசியமென்ன என தனிப்படை அமைத்து விசாரணை நடத்திவருகின்றனர்.

கடந்த ஒரு வாரமாக கொலைகள் அடுத்தடுத்து நடந்து வேலூர் மாவட்ட போலீசை அதிர்ச்சியடைய செய்துள்ளது. முன்று தினங்களுக்கு முன்பு ஒடுக்கத்தூர் அருகே வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தந்தை மற்றும் 10 வயது மகளை அவர்களது உறவினர் ஒருவர் படுகொலை செய்தது பெரும் பரபரப்பானது.

Advertisment

இந்நிலையில் 3 கொலை நடந்துள்ளது. அதேபோல் கொடூரமாக முன் விரோதத்தில் வெட்டுவதும் நடந்துள்ளது. இந்த கணக்கை சேர்த்தால் இந்த க்ரைம் ரேட் இன்னும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.