வேலூர் மாவட்டத்தில் கடந்த 3 தினங்களாக அதிக கனமழை பெய்து வருகிறது. அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட்ட ஒடுக்கத்தூர் அடுத்த கே.ஜி.ஏரியூர் கொல்லைமேடு கிராமத்தில் வேலு என்பவர் தனக்கு சொந்தமான நிலத்தில் மாடு, ஆடுகளின், சாண எருவு கொட்ட பள்ளம் தோண்டி வைத்துள்ளார். அதில் பாதியளவுக்கு மேல் சாணங்கள் கொட்டப்பட்டு இருந்துள்ளன. அந்த பள்ளத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வந்த மழையால் நீர் தேங்கியிருந்தது.

Advertisment

ஆகஸ்ட் 19- ந்தேி தேங்கிய மழை நீரில் அதே ஊரை சேர்ந்த 3 வயதான பிரித்திகா, 6 வயதான ஹரிணி என்கிற இரண்டு குழந்தைகள் விளையாட சென்றுள்ளனர். அப்படி சென்றபோது, வேலுவின் நிலத்தில் தோண்டி வைக்கப்பட்டு இருந்த பள்ளத்தில் விழுந்துள்ளனர். அவர்களை உள்ளிருந்த சாணம் உள்ளே இழுத்துக்கொண்டுள்ளது.

Advertisment

vellore district heavy rain continue day by day two childrens incident

இரண்டு குழந்தைகள் நடந்து சென்றவர்கள் திடீரென காணாமல் போனதை பார்த்து, பெற்றோர் அருகில் உள்ள இடங்களில் தேடினர். அப்போது ஒரு குழந்தை மட்டும் அந்த பள்ளத்தில் தத்தளித்து கொண்டிருந்தது. அதனை பார்த்த பெற்றோர் மற்றும் அருகில் உள்ள மக்கள் நீரில் மூழ்கிய அந்த குழந்தைகளை வெளியே இழுத்து தரையில் வைத்து முதலுதவி செய்துள்ளனர்.

ஆனால், அவர்கள் ஏற்கனவே இறந்து போனது தெரியவந்தது. அந்த குழந்தைகளின் பெற்றோர் அலறி துடித்து அழுதனர். இதுப்பற்றிய தகவல் வருவாய்த்துறையினர் மூலமாக வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் கவனத்துக்கு சென்றது. உடனே அவர் உயிரிழந்த சிறுமிகளின் வீட்டிற்கு வந்து அஞ்சலி செலுத்தியவர், குடும்பத்திற்கு ஆறுதல் கூறிவிட்டு சென்றார். இது தொடர்பாக அறிக்கை பெற்று அரசாங்கத்திற்கு அனுப்பி அரசின் நிதியுதவி பெற்று தருவதற்காக பணியில் ஆட்சியர் ஈடுபட்டுள்ளார் என்றனர் விவரம் அறிந்த அதிகாரிகள்.

Advertisment