Advertisment

காவலரை பிளேடால் தாக்கிய இளைஞர்!

vellore district, gudiyatham police incident

Advertisment

வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரம் ஜோதிமடம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் நவீன். இவர் அக்டோபர் 1- ஆம் தேதி இரவு குடித்துவிட்டு, அந்த பகுதி பொதுமக்களிடம் தகராறு செய்துக்கொண்டு இருந்துள்ளார். இதுதொடர்பாக, அப்பகுதி கடைக்காரர்கள் குடியாத்தம் நகர காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து, காவல்நிலையத்தில் இருந்து அருள்கண்மணி என்கிற காவலர் வந்துள்ளார். அங்கு பைக்கில் வந்த அருள்கண்மணி, நவீனிடம் “ஏய் பிரச்சனை செய்யாம வீட்டுக்கு போடா” எனச்சொல்லியுள்ளார். “நீ என்னடா என்னை போடான்னு சொல்றது” என காவலரிடம் தகராறு செய்ய, அப்போ ஸ்டேஷனுக்கு வா என இழுத்துள்ளார்.

என்னையே ஸ்டேஷனுக்கு கூப்பிடறயா எனச்சொல்லி பாக்கெட்டில் வைத்திருந்த பிளேடு எடுத்த நவீன், காவலர் அருள்கண்மணியை நோக்கி வீச, அது காவலர் இடது கன்னத்தைக் கிழித்து ரத்தம் வந்தது. பிளேடு கிழித்த வலியால் அருள் துடிக்க துவங்கினார். அக்கம் பக்கம் இருந்தவர்கள் அதிர்ச்சியாகி அதனை பார்த்து நின்றுள்ளனர்.

Advertisment

என்னை இன்னோரு முறை ஸ்டேஷனுக்கு கூப்பிட்டிங்கன்னா இதான் நிலைமை என எச்சரித்துவிட்டு அங்கிருந்து போயுள்ளான். அதன்பின்னர் அங்கிருந்தவர்கள் காவலரை, மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

இந்த தகவல் குடியாத்தம் காவல்நிலைய அதிகாரிகளுக்கு செல்ல அதிர்ச்சியாகியுள்ளனர். உயர் அதிகாரிகள் தகவலை கேள்விப்பட்டு அதிர்ச்சியாகி, பொது இடத்தில் போலீஸ் மீது கைவைச்சவனை இன்னுமா அரஸ்ட் செய்யவில்லை எனக்கேட்க, இரவோடு இரவாக நவீனை காவல் நிலையத்துக்கு தூக்கி வந்துள்ளதாக கூறப்படுகிறது.அந்த இளைஞர் மீது காவல்துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

gudiyatham police vellore district
இதையும் படியுங்கள்
Subscribe