கரோனா பரவலை முன்னிட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் மளிகை பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்த்தப்பட்டுள்ளது. பொருட்கள் வரத்து குறைவு எனக் காரணம் சொல்லி துவரம் பருப்பு, எண்ணெய், கடுகு, மிளகு, கடலை பருப்பு போன்றவற்றின் விலை கடுமையாக உயர்த்தி விற்பனை செய்தனர்.

Advertisment

uuu

இது தொடர்பாக பொதுமக்களிடமிருந்து புகார்கள் அரசுக்கு சென்றன. அதனை தொடர்ந்து வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சண்முகசுந்தரம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், துவரம் பருப்பு கிலோ 90 ரூபாய், அதிகபட்சம் 110 வரை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும், உளுந்தம் பருப்பு கிலோ 100 ரூபாய், அதிகபட்சம் 110 ரூபாய், கடலை பருப்பு 70 ரூபாய் என்கிற விலையில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.

 nakkheeran app

Advertisment

இப்படி ஒவ்வொரு பொருளுக்கும் விலை நிர்ணயம் செய்துள்ளார். பொருட்களின் விலை பட்டியலை கடைக்கு வெளியே வைக்க வேண்டும். இதனை தாண்டி அதிகளவில் பொருட்களின் மீது விலை வைத்து விற்பனை செய்வது கண்டறியபடிப்பட்டால், அந்த கடைகள் 6 மாதத்துக்கு மூடி சீல் வைக்கப்படும். குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும், கடை லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என அறிவித்துள்ளார்.

உணவு பொருள் பதுக்கலை கண்டறிய உணவு பாதுகாப்புத்துறை, வருவாய்த்துறை, குடிமை பொருள் வழங்கல் துறை போன்றவை மூலமாக ரெய்டு நடத்தப்படும் எனச்சொன்னதை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.