Vellore district collector with bullock cart during Pongal celebration

Advertisment

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதில் அனைத்து மதத்தினர் மற்றும் வெளிநாட்டினர் இணைந்து சமத்துவ பொங்கல் வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அலுவலர்கள், மருத்துவத் துறையினர், மலைவாழ் மக்கள், இலங்கைத் தமிழர்கள், ஆதரவற்ற குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், வெளிநாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் எனப் பலரும் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் வைத்து பொங்கலைக் கொண்டாடினர்.

நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரும் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியனுக்கு பூமாலை அணிவித்து வரவேற்றனர். பொங்கல் விழாவிற்கு அனைத்து அலுவலர்களும் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி, சேலை அணிந்து வந்து பொங்கல் விழாவில் பங்கேற்றனர். வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன்,வேஷ்டி சட்டையில் கலந்துகொண்டு அங்கு காட்சிக்காக அலங்கரித்து வைத்திருந்த மாட்டு வண்டியைப் பார்த்ததும் அதில் ஏறி ஓட்டினார். அவருடன் வெளிநாட்டினர் மாட்டு வண்டியில் ஏறி ஆட்சியர் அலுவலகத்துக்குள் பயணம் செய்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.