Advertisment

கடத்தல்கார்கள் கேட்ட கேள்வி;ஓடிப்போன அதிகாரிகள் 

வேலூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இரவு நேரங்களில் பாலாற்றில் மணல் கொள்ளை அதிகமாக நடப்பதாக மாவட்ட ஆட்சியர் ராமன் மற்றும் திருப்பத்தூர் சார் ஆட்சியர் பிரியங்கா பங்கஜத்திடம் விவசாயிகள் புகார் ஒன்றைக் கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் சார் ஆட்சியர் ஆம்பூர் வட்டாட்சியரிடம், இரவு நேரங்களில் ரோந்து சென்று மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர். அதனைத்தொடர்ந்து மே 7 ந்தேதி இரவு மணல் கொள்ளை நடப்பதாக கூறப்படும், பெரியவரிகம். பனங்காட்டூர், சின்னவரிகம் ஆகிய பகுதிகளில் ரோந்து மேற்கொண்டனர். அப்போது பாலாற்றில் இருந்து மணல் ஏற்றி வந்த இரு மாட்டு வண்டிகளை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் கூறியது வட்டாட்சியரை அதிர்ச்சியடைய வைத்தது.

Advertisment

s

தாசில்தாரிடம் பேசிய மாட்டு வண்டிக்காரர், 15 நாளைக்கு ஒரு முறை உங்க வருவாய்த்துறைக்காக ஒரு வண்டிக்கு 2500 பணத்தை சரியாக கொடுத்து வருகிறோம். பணத்தை வாங்கிக்கொண்டு இப்படி திடீர்னு வந்து எங்க வண்டிகளை பிடித்தால் நாங்க என்ன செய்வது என்று கேள்வி எழுப்பினார். இதனால் அதிர்ச்சியான அதிகாரிகள் இரு மாட்டு வண்டியை விட்டுவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர். இரு மாட்டு வண்டிக்காரர்களும் ஜாலியாக மணலுடன் சென்றுவிட்டனர்.

இதனைப்பார்த்த விவசாயிகள், மணல் கடத்தல்காரர்கள் ஒரு கேள்விக்கேட்டதும், அதிகாரிகள் இப்படி ஓடிப்போய்ட்டாங்களே என வேதனைப்பட்டனர். இந்த தகவல் ஆம்பூர் வட்டாரம் முழுவதும் தீ போல் பரவ அதிகாரிகள் தலைகுனிந்து நிற்கின்றனர்.

sand Vellore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe