Skip to main content

32 ஆண்டுக்கு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தை பார்த்து வேதனைப்பட்ட முன்னாள் மாணவர்கள்

Published on 13/05/2019 | Edited on 13/05/2019

 


வேலூர் மாவட்டம் ஆம்பூர் கன்கார்டியா ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் கடந்த 1985-- 87ஆம் கல்வியாண்டில் பயின்ற வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, கன்னியாகுமரி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களை சேர்ந்த 40 பேர் பயின்றுள்ளனர். படித்து முடித்த அவர்கள் தற்போது பல்வேறு இடங்களில் ஆசிரியர், ஆசிரியையாக பணியாற்றி வருகின்றனர்.

 

v


அவர்கள் படித்து முடித்து அந்த கல்லூரியையும், உடன் படித்தவர்களையும் பிரிந்து 32 ஆண்டுகள் கடந்துவிட்டது. இந்நிலையில் தற்போதைய டெக்னாலஜி யுகத்தில் அனைவரும் செல்போன், வாட்ஸ்அப் வழியாக தங்களுக்குள் சிலர் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு கல்லூரி கால வாழ்க்கையை பற்றி பேசிவந்துள்ளனர்.


இந்த நிலையில்  32 ஆண்டுகளுக்குப் பிறகு மாணவர்கள் ஒன்று சேர திட்டமிட்டுள்ளனர். ஒருவருக்கொருவர் தொடர்புகளை ஏற்படுத்தி 40 பேருக்கும் தகவல் அனுப்பியுள்ளனர். அவர்கள் அனைவரும் மே 12ந்தேதி காலை தாங்கள் படித்து கல்லூரியில் குடும்பத்தோடு வந்து சேர்ந்தனர். 40 பேரில் 36 பேர் மட்டுமே வந்துள்ளனர். மீதி 4 பேர் மரணித்துவிட்டதால் அவர்கள் வரவில்லையாம்.

 

v


மறைந்த தங்களது நண்பர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தியுள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கு அப்போது தங்களுக்கு பாடம் எடுத்த ஆசிரியர்களான தம்பையா மற்றும் ஜெயக்குமார் ஆகிய இருவரும் சிறப்பு அழைப்பாளராக வரவழைத்து, அவர்களிடம் ஒவ்வொருவரும் தங்களை பற்றியும், தங்கள் குடும்பம் பற்றியும் கூறி ஆசி வாங்கியுள்ளனர்.

 

v

 

இந்த முன்னாள் மாணவர்கள் குழு, கண்கார்டியா அரசு துவக்க பள்ளிக்கு சுமார் 10 ஆயிரம் மதிப்பிலான பீரோ மற்றும் நாற்காலிகள் வழங்கியுள்ளனர். 3500 ஆசிரியர்களை உருவாக்கிய அந்த பயிற்சி நிறுவனம் தற்போது, அங்குள்ள நிர்வாகத்தினரோடு கலந்தாலோசனை செய்து, நடத்த ஏற்பாடு செய்யலாம் எனக்கூறியுள்ளதாக தெரிகிறது. 
 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆம்பூர் அமமுக வேட்பாளர் கார் கண்ணாடியை உடைத்த அதிமுகவினர்

Published on 18/04/2019 | Edited on 18/04/2019

 


வேலூர் மாவட்டம், ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதியில் திமுக சார்பில் வில்வநாதன் என்பவரும், அதிமுக சார்பில் ஜோதி ராமலிங்க ராஜா, அமமுக சார்பில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ பாலசுப்பிரமணியும் மோதுகின்றனர்.

 

a

 

அதிமுகவின் வாக்குகளை பெரியளவில் அமமுக வேட்பாளர் பாலசுப்பிரமணி பிரித்தார். இதனால் பெரும் கொதிப்பில் இருந்தனர் அதிமுகவினர். கஸ்பா என்கிற பகுதியில் உள்ள வாக்குசாவடி எண் 13, 14 மையங்களை வேட்பாளர் என்கிற முறையில் பார்வையிட சென்ற பாலசுப்பிரமணியத்தின் காரை மடக்கிய அதிமுகவினர், நீ இங்க வரக்கூடாது என மடக்கி தகராறு செய்தனர். 

 

a

 

தகராறில் பாலுவின் கார் கண்ணாடியை உடைத்தனர் அதிமுகவினர். இதனை கேள்விப்பட்ட போலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து அமமுகவினரை விரட்டி விரட்டி தாக்கினர். அவர்கள் அடிக்கு பயந்து வீடுகளுக்குள் ஓடிப்போய் மறைந்தனர். வீடுகளுக்குள்ளும் போலிஸ் சென்று தாக்கியது. சுதாகர் என்பவரின் வீட்டுக்குள் போலிஸ் புகுந்து சுதாகரின் மகன்களான சுதர்ஷன், டேவிட்டை அடித்து மண்டையை உடைத்துவிட்டு வந்துள்ளது.

 

a

 

தகராறுக்கு சம்மந்தமில்லாத இளைஞர்கள் இருவரின் மண்டையை உடைத்துவிட்டு போலிஸ் வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவர்கள் தோதல் ஆணையத்துக்கு புகார் அனுப்ப முடிவு செய்துள்ளனர் என்கின்றனர்.