Advertisment

காட்பாடி பாலத்தை திறந்த விவகாரம்... வேலூர் மாவட்ட அதிமுக செயலாளர் கைது!

Vellore district AIADMK secretary arrested for opening Katpadi bridge

வேலூர் மாவட்டம் காட்பாடியில் ரயில்வே மேம்பாலம் சீரமைக்கும் பணி கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்தநிலையில் அந்த பாலம் வரும் நான்காம் தேதி முழுபயன்பாட்டிற்காகதிறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று முதல் இருசக்கர வாகனங்கள் மட்டும் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டு பாலம் திறக்கப்பட இருந்தது. இந்நிலையில் அதிமுகவின் வேலூர் மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு அவரே தன்னிச்சையாக இன்றுரிப்பனைகட்டிபாலத்தைதிறந்து வைத்துள்ளார். வரும் நான்காம் தேதி வேலூர்எம்.பிகதிர் ஆனந்த் அந்தபாலத்தைதிறந்து வைக்க ஏற்பாடுகள் நடைபெற்றநிலையில் அதிமுகமாவட்டசெயலாளர் அப்பு அந்தபாலத்தைதிறந்து வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

Advertisment

இதுதொடர்பாகவருவாய்த்துறைஅளித்த புகாரின் பேரில்அதிமுகமாவட்டசெயலாளர்பாலத்தைதிறந்தது தொடர்பாக அவரது வீட்டிற்கே சென்றுபோலீசார்விசாரணை நடத்தினர். விசாரணையில் தான் செய்தது தவறு எனஎஸ்.ஆர்.கே.அப்பு ஒப்புக்கொண்டதால் அவரைபோலீசார்கைது செய்தனர். இருப்பினும் அவரது ஆதரவாளர்கள் வீட்டின் அருகே கூடியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.இதனால் அங்குபோலீசார்குவிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.

Advertisment

Bridge katpadi Vellore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe