Advertisment

தொடர்கதையாகும் மாடுகளின் கொடூர கொலை... பீதியில் மக்கள்...

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் ஏரிக்கரை அருகே அமைந்துள்ள விவசாய நில குடியிருப்புகளில் தொடர் திருட்டு நடைபெற்று வருகிறது.

Advertisment

vellore cow issue

கடந்த சில தினங்களாக நிலத்தில், மாட்டு கொட்டகையில் கட்டி வைக்கப்பட்டுள்ள மாடுகள் திருடப்பட்டு அருகிலுள்ள இடங்களில் கொலை செய்து வீசப்பட்டு வருகிறது.

இஸ்மாயில் என்பவருக்கு சொந்தமான 2 ஜல்லிக்கட்டு மாடுகள், சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான ஒரு மாடு ஏற்கனவே கிணற்றில் அடித்து போடப்பட்டுயிருந்தது. அதேபோல் சேகர் என்பவருக்கு சொந்தமான இரண்டு மாடுகளில் ஒன்று ஏரிக்கரையில் அடித்து கொலை செய்து வீசப்பட்டது. அவரது மற்றொரு மாட்டை கழுத்தில் கயிறு கட்டி மரத்தில் தொங்க விட்டு சென்றுள்ளனர்.

Advertisment

இந்த நிலையில் ராஜகோபால் என்பவருக்கு சொந்தமான மாடு ஒன்று திருட்டு போயுள்ளது. இதனால் பெரியாங்குப்பம் பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

தொடர்ச்சியாக மாடுகள் களவாடப்பட்டு, அவற்றை கொலை செய்து வீசிவிட்டு செல்வது வாடிக்கையாக உள்ளதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். இது தொடர்பாக ஆம்பூர் தாலுக்கா காவல் நிலையத்தில் புகார் கூறப்பட்டுள்ளது.

Vellore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe