நடந்து முடிந்த 17 ஆவது மக்களவை தேர்தலின் போதுதமிழகத்தில் வேலூர் மக்களவை தொகுதிக்கு மட்டும் தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வேலூர் தொகுதிக்கு மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வேலூர் மக்களவை தொகுதியில் அதிமுகசார்பில் புதிய நீதி கட்சி தலைவர்ஏ.சி சண்முகம் போட்டியிட இருப்பதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. அதேபோல் திமுக சார்பில் திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுவார் என திமுக தலைமை அறிவித்துள்ளது.