வேலூர் மக்களவை தேர்தல்- வாக்குப்பதிவின் முழு விபரங்கள்!

வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலுக்கான வாக்குபதிவு ஆகஸ்ட் 5- ஆம் தேதி நடைபெற்றது. இந்த தொகுதியில் மொத்தம் 14,32,555 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 7,01,351 பேரும், பெண் வாக்காளர்கள் 7,31,099 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 105 பேரும் உள்ளனர்.

வேலூர் தொகுதியில் பதிவான 71.52 சதவீதம் ஆகும். அதாவது 10,24,352 மக்கள் வாக்களித்துள்ளனர். இதில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களித்துள்ளனர். மொத்தமாக பதிவான வாக்குகளில் ஆண் வாக்காளர்கள் 5,02,861 பேரும், பெண் வாக்காளர்கள் 5,21,452 பேரும் வாக்களித்துள்ளனர்.

vellore constituency lok sabha election polling details

வேலூர் மக்களவை தொகுதியில் வேலூர், அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம், ஆம்பூர், வாணியம்பாடி என ஆறு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அதிகமான வாக்குகள் பதிவான தொகுதி கே.வி.குப்பம் ( தனி ) ஆகும். இந்த தொகுதியில் 2,14,826 வாக்குகள் உள்ளன. அதில், 1,62,413 வாக்குகள் பதிவாகியுள்ளன. இங்கு 52,000 வாக்குகள் பதிவாகவில்லை என்பது குறிப்பிடதக்கது.

அதேபோல் இஸ்லாமியர்கள் நிறைந்து வாழும் வாணியம்பாடி தொகுதியின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2,36,911 ஆகும். இதில் பதிவானது 1,73,545 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. இந்த தொகுதியில் 63,000- க்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவாகவில்லை. மேலும் ஆம்பூர் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,24,863 ஆகும். இதில் பதிவானது 1,58,591 வாக்குகளாகும். இங்கு 66 ஆயிரம் வாக்குகள் பதிவாகவில்லை என்பது குறிப்பிடதக்கது.

vellore constituency lok sabha election polling details

ஆறு சட்டமன்ற தொகுதிகளில் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதி குடியாத்தம் ( தனி ) ஆகும். இந்த தொகுதியின் வாக்காளர் எண்ணிக்கை, 2,71,855 ஆக உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் 1,87,743 ஆகும். இந்த தொகுதியில் சுமார் 80,000 மேற்பட்ட வாக்குகள் பதிவாகவில்லை.

திமுக, அதிமுக பெரிதும் கவனம் செலுத்திய தொகுதி அணைக்கட்டு. இந்த தொகுதியில் வாக்காளர்கள் எண்ணிக்கை, 2,39,045 ஆக உள்ளது. இதில் பதிவானது 1,78,723 வாக்குகள் மட்டுமே. சுமார் 60,000- க்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவாகவில்லை.

இதில், வேலூர் சட்டமன்ற தொகுதியில் தான் குறைவான வாக்குகள் பதிவாகியுள்ளது. 66.65 சதவித அளவுக்கு தான் வாக்குகள் பதிவாகியுள்ளது. அந்த தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,45,055 ஆகும். இதில் பதிவான 1,63,337 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. சுமார், 81,000 மேற்பட்ட வாக்குகள் பதிவாகவில்லை. இந்த வேலூர் தொகுதி வேலூர் மாநகராட்சியை உள்ளடக்கியது. படித்தவர்கள் அதிகமுள்ள, இந்த தொகுதியில் குறைவான வாக்குகளே பதிவாகியுள்ளது. இதனால் தேர்தல் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

POLLING STATIONS Tamilnadu vellore lok sabha election
இதையும் படியுங்கள்
Subscribe