vellore collector viral video

Advertisment

வேலூர் மாவட்ட ஆட்சியர் ஏர் பிடித்து நிலத்தை உழுத வீடீயோ ஒன்று வைரலாகி வருகிறது.

வேலூர் மாவட்ட ஆட்சியராக குமாரவேல் பாண்டியன் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 24 ஆம் தேதி பீஞ்சமந்தை என்ற மலைக்கிராமத்தில் சாலைகள் அமைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து ஜார்தான்கொள்ளை என்ற கிராமத்தை பார்வையிட்டார்.

அப்போது அங்கு விவசாய நிலத்தில் விவசாயி ஒருவர் மாடுகளை பூட்டி ஏர் உழுது கொண்டிருந்தார். இதையடுத்து ஆட்சியர் அங்கு சென்று விவசாயிஉடன் சிறிது நேரம் உரையாடினார். அதன் பின்னர் கலப்பையை பிடித்து ஏர் உழுதார். தற்போது இந்த வீடியோ மக்கள் மத்தியில் கவனம் பெற்று வைரலாகி வருகிறது.