Advertisment

திமுகவிலிருந்து விலகிய கவுன்சிலர் ஆடியோ வெளியிட்டதால் பரபரப்பு!

Vellore city councillor who resigned from DMK released an audio

Advertisment

வேலூர் மாநகராட்சி 27வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் சதீஷ்குமார் என்பவர், தி.மு.க-வில் இருந்து திடீரென விலகிக் கொள்வதாக ஆடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ‘‘அரசியலுக்கு வந்ததில் இருந்து தேவையில்லாத பிரச்சனைகளும், தேவையில்லாத விமர்சனங்களும் என்னை நோக்கி வந்துகொண்டே இருக்கின்றன. நான் எதைச் செய்தாலும் ‘அது தவறு’ என்று சொல்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல், தேவையில்லாத விரோதமும் உருவாகிறது. எல்லோரும் ஒரு விஷயத்தை கேட்பார்கள். அதையே நான் கொஞ்சம் வேகமாக கேட்பேன். நான் நார்மலாக பேசுவதே அப்படித்தான். ஆனால், நான் கோபப்படுவதாக பலர் நினைக்கிறார்கள். இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொள்ள நினைக்கின்றேன். வேறு எந்தக் கட்சியிலும் போய் சேரமாட்டேன்.

எதிர்காலத்தில் பொறுமையும், அனுபவமும் வந்தால் அரசியலுக்கு வருகிறேன். கடைசி வரை பக்குவம் வராவிட்டால் அரசியலுக்கு வரவே மாட்டேன். இப்போதைக்கு மக்கள் பிரதிநிதியாக என் வார்டு பணிகளை மட்டுமே கவனிக்க விரும்புகிறேன். இதுஎன் சொந்த முடிவு’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Councillor Vellore
இதையும் படியுங்கள்
Subscribe