Advertisment

பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற கேபிள் டிவி ஆப்ரேட்டர்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் நெல்லூர்பேட்டையை சேர்ந்தவர் கேபிள்டிவி ஆப்ரேட்டர் சசிகுமார். இவர் சத்துவாச்சாரியில் உள்ள தமிழ்நாடு அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு மையத்தில் திடீரென உள்ளே புகுந்து பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த காவலர் மற்றும் பத்திரிகையாளர்கள் அவரை தடுத்து நிறுத்தினார்கள். மேலும் அவர் மீது தண்ணீர் ஊற்றி காப்பாற்றினார்கள்.

Advertisment

vellore cable tv operator decide wrong way police investigation

குடியாத்தம் நகரில் கேபிள் டிவி நடத்தி வருவதாகவும், தனக்கு அரசு கேபிள் டிவி நிறுவனம் செட்டாப் பாக்ஸ்களை வழங்காமல் அலைக்கழிப்பதாகவும், அரசு கேபிள் டிவி அதிகாரிகளே பாலிமர் செட்டாப் பாக்ஸ்களை போடுவதற்கு வழிவகை செய்வதாக கூறி அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்டது தெரிய வந்தது.இதனால் அந்த பகுதியில் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. இந்த தகவல் அறிந்து வந்த சத்துவாச்சாரி காவல்துறையினர் சசிகுமாரை கைது செய்து அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

tactv cable tv operator Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe