வேலூர் மாநகரம், தோட்டப்பாளையத்தை சேர்ந்தவர் 32 வயதான அய்யப்பன். இவர் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். ஜனவரி 13ந்தேதி மாலை 5 மணியளவில் வாகனத்தில் செல்லும்போது, சைதாப்பேட்டையில் அவரை பின்தொடர்ந்து வந்து மடக்கிய மூன்று பேர் கொண்ட கும்பல் அய்யப்பனை சரமாரியாக வெட்டி கொலை செய்தது. அய்யப்பன் உயிரிழந்துவிட்டார் என தெரிந்தபின்பே அந்த கும்பல் ஒரு வாகனத்தில் தப்பி சென்றுள்ளது. பட்டபகலில் நடுரோட்டில் நடைபெற்ற இந்த படுகொலையை பார்த்து அப்பகுதி மக்கள் பயந்து ஓடினர்.

Vellore auto driver incident-police Inquiry

Advertisment

Advertisment

இதுப்பற்றி தெற்கு காவல்நிலையத்திற்கு தகவல் சொல்லப்பட்டதும் எஸ்.பி, டி.எஸ்.பி என உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்திவருகின்றனர். இறந்த அய்யப்பன் குடும்பத்தார் வந்து உடலை பார்த்து ரோட்டில் புரண்டு கதறி அழுதனர். அய்யப்பனை வெட்டியது யார்? அவர்களுக்கும் அய்யப்பனுக்கும் என்ன பிரச்சனை ? என தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகில் நடைபெற்ற இந்த படுகொலை வேலூர் மாநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.