வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த துத்தி பட்டு பகுதியில் உள்ள அன்னை சத்யா நகர், கலைஞர் நகர் ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வழங்கவில்லையாம், அதோடு கால்வாய் அடைப்பு சரிசெய்யவில்லை, கொசு உற்பத்தியை தடுக்கவில்லை, தெருவிளக்கு எரியவில்லை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி ஊராட்சி செயலாளரிடம் கூறினார்களாம் அப்பகுதி மக்கள். மேலும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Advertisment

Public blockade protest denouncing panchayat administration

இந்நிலையில் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கிராம ஊராட்சி சேவை மையத்தை செப்டம்பர் 13 ந்தேதி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைப்பற்றி அறிந்தும் அதிகாரிகள் யாரும் அங்கு வரவில்லை. பின்னர் மக்களே கலைந்து சென்றனர்.