Skip to main content

சிக்கும் அதிமுகவினர் - தப்பிக்கவைக்கும் தேர்தல் அதிகாரிகள்

Published on 15/04/2019 | Edited on 16/04/2019

 


வேலூர் தொகுதியில் அதிமுக சின்னத்தில் போட்டியிடும் முதலியார் சாதி கட்சி தலைவரான ஏ.சி.சண்முகம், கடந்த முறை போல் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துவிடக்கூடாது என தலைக்கு ஆயிரம் ரூபாய் என வாக்குக்கு தருவதாக தொகுதியில் கூறப்படுகிறது.

 

p


அப்படி பணம் தருபவர்களை தேர்தல் பறக்கும் படையினர், கண்காணிப்பு படையினர் பிடிப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு கடந்த இரண்டு நாட்களாக தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மீது சுமத்தப்பட்டது.

 

p


இந்நிலையில், ஏப்ரல் 15ந்தேதி காலை வாணியம்பாடி அடுத்த ராணிப்பேட்டை என்கிற கிராமத்தில் அதிமுக பிரமுகரான சம்பத், வாக்குக்கு பணம் தந்துக்கொண்டிருந்தபோது பறக்கும் படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 1.6 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

p


அதேப்போல், ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இங்கு ஒரு வாக்குக்கு 2000 ரூபாய் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. அப்படி பணம் வழங்குவதாக பறக்கும் படைக்கு தகவல் சென்றதன் அடிப்படையில், பையில் இருந்த பணத்தை சிலர் கீழே போட்டுவிட்டு தப்பி ஓடியதாக அதிகாரிகள் கூறுகின்றனர். அந்த பையில் 13.60 லட்சம் இருந்ததாக கூறப்படுகிறது.

 

p


இந்த பணம், அதிமுக வேட்பாளர் ஜோதி ராமலிங்க ராஜாவுக்கு ஓட்டுப் போடச்சொல்லி அதிமுகவினர் தந்த பணம் என்கிறார்கள். திட்டமிட்டே பணம் தந்தவர்களை ஆளும்கட்சி மிரட்டலால் அதிகாரிகள் தப்பிக்க வைத்துவிட்டார்கள் எனக்கூறப்படுகிறது.


இப்படி ஆளும்கட்சியான அதிமுக வேட்பாளர்களுக்கு பணம் தருவதாக வேலூர் பாராளுமன்ற தொகுதியில் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடதக்கது.
 

சார்ந்த செய்திகள்