ADVERTISEMENT

ரஜினி மன்றத்தை பின்பற்றும் அரசியல் கட்சிகள்...குஷியில் ரஜினி ரசிகர்கள்!

04:52 PM Jul 12, 2019 | santhoshb@nakk…

தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. அதிலும் வட மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. வேலூர் மாவட்டத்தில் தினமும் 10 இடங்களிலாவது குடி தண்ணீருக்காக போராட்டம் நடைபெற்று வருகிறது. தண்ணீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும், அதோடு, மக்களிடம் தண்ணீர் சேமிப்பு தொடர்பாக ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என முடிவு செய்தனர் வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து பேசி ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர். அதன்படி, கண்ணீரை தடுக்க தண்ணீரை சேமிப்போம் என்கிற பெயரில் சோளிங்கர் நகரில் 1500 பேர் கலந்துக்கொண்ட தண்ணீர் தொடர்பான விழிப்புணர்வு பேரணியை ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் சோளிங்கர் ரவி நடத்தினார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

விழிப்புணர்வு பேரணியோடு நிறுத்திக்கொள்ளாமல் குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில், சொந்தமாக தண்ணீர் லாரி வாங்கி எந்த பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு உள்ளதோ அந்த பகுதிக்கு தண்ணீர் லாரியை அனுப்பி தண்ணீர் தருவது, அதோடு தினமும் சுத்திகரிக்கப்பட்ட 25 லிட்டர் தண்ணீர் கேன் தரும் பணியை தொடங்கி வைத்தார் ரவி.

கடந்த ஜூன் 23 ஆம் தேதி முதல், குடி தண்ணீர் தட்டுப்பாடு அதிகம் உள்ள சோளிங்கர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு டேங்க் தண்ணீரை தினமும் 4 முறை சப்ளை செய்கின்றன. கடமைக்கு ஒரு நாள் செய்யாமல் தொடங்கியது முதல் இன்று வரை தினமும் 4 முறை தண்ணீரை இலவசமாக சப்ளை செய்து வருகின்றனர். தண்ணீர் சப்ளை செய்யும் போது, தண்ணீர் சேமிப்பு தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கி வருகின்றன.


சோளிங்கர் மற்றும் அதன் சுற்று வட்டார மக்கள் ரஜினி மக்கள் மன்றத்தின் மீதும் அதன் நிர்வாகிகள் மீது மரியாதையும், மதிப்பும் ஏற்படுத்தியுள்ளது. ரஜினி மக்கள் மன்றத்தின் இந்த செயலைப் பார்த்து விட்டு சோளிங்கர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் தங்கள் பகுதியில் கோலோச்சும் திமுக, அதிமுக, பாமக நிர்வாகிகளிடம், நீங்க கட்சி நடத்தறிங்க, அவுங்க மன்றம்மா இருக்காங்க. அவங்களே சொந்த காசை போட்டு இவ்ளோ செலவு செய்யும் போது, எம்.எல்.ஏ, எம்.பி, மந்திரின்னு இருக்கற நீங்க ஏன் எதுவும் செய்யமாட்டிக்கிறீங்க என கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதனால் சோளிங்கர், ராணிப்பேட்டை, வாலாஜா உட்பட பல இடங்களில் மற்ற அரசியல் கட்சியினரும் லாரிகள் மூலம் தத்தம்மது பகுதிகளில் தண்ணீர் சப்ளை செய்ய துவங்கியுள்ளனர். தங்களை பார்த்து அரசியல் கட்சிகள் மக்களுக்கு தண்ணீர் சப்ளை செய்ய லாரிகளை அனுப்புவதை கண்டு ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளன. வாணியம்பாடியிலும் ஒரு விழிப்புணர்வு பேரணி நடத்தினர் ரஜினி மக்கள் மன்றத்தினர். அதே போல் அங்கும் தண்ணீர் சப்ளை செய்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT