வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த காலபுதூர் கிராமத்தில் மத்திய காவல் படையில் காவலராக பணியாற்றியவர் தினகரன். இவரின் வீடு காலபுதூர் கிராமத்தில் உள்ளது. இவர்கள் குடும்பத்தோடு வெளியூர் சென்றுள்ளனர். ஜீலை 2ந்தேதி இரவு வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 21 சவரன் தங்க நகை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை போயிருப்பதை பார்த்து அதிர்ச்சியாகியுள்ளனர்.

Advertisment

h

அதேபோல், அதே கிராமத்தை இந்திய ராணுவத்தில் பணியாற்றிய முன்னாள் வீரர் ராஜாராம் என்பவரின் வீடு உள்ளது. இவரது வீட்டிலும் கடந்த ஒரு வாரமாக யாருமில்லையாம். இந்நிலையில் வீடு திறந்து கிடப்பதை பார்த்து அவரது குடும்பத்தாருக்கு தகவல் கூறியுள்ளனர். அவர்கள் வந்து வீட்டில் போய் பார்த்தபோது, வீட்டில் வைத்திருந்த 33 சவரன் தங்க நகை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் ரொக்கம் திருடு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியாகியுள்ளனர்.

h

Advertisment

இதுதொடர்பாக, திருடு கொடுத்த இருவரும் பள்ளிக்கொண்டா காவல்நிலையத்தில் புகார் தந்துள்ளனர். மோப்ப நாயுடன் வந்த போலிஸார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.