ADVERTISEMENT

நடுரோட்டில் பிறந்தநாள் கொண்டாடிய போலீஸ் அதிகாரி! கேக் ஊட்டிய ரவுடி

10:37 PM Jul 02, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT


வேலூர் மாவட்டத்தின் ஆட்சியராக இருந்த ராமன், சேலம் மாவட்ட ஆட்சியராக கடந்த வாரம் மாற்றப்பட்டார். வேலூர் மாவட்ட ஆட்சியராக சென்னை மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டார். ஜீலை 1ந்தேதி சண்முகசுந்தரம் வேலூர் மாவட்ட ஆட்சியராக பதவியேற்றார்.

ADVERTISEMENT


வேலூர் சாரக காவல்துறை தலைவராக ( டி.ஐ.ஜி ) வனிதா பணியாற்றி வந்தார். இவர் ஐ.ஜி யாக பதவி உயர்வு பெற்று வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டதால் அந்த பதவிக்கு காமினி ஐ.பி.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜியாக பணியாற்றி வந்தார். இவர் ஜீலை 2ந்தேதி வேலூர் டி.ஐ.ஜி அலுவலகத்தில் பதவியேற்றுக்கொண்டார். அவரை திருவண்ணாமலை, வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் மற்ற அதிகாரிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.


அமைதியான மாவட்டங்கள் என பெயரெடுத்த இந்த மாவட்டங்களில் சமீப காலமாக கொலை, கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து, ரவுடிகள் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தை விட வேலூர் மாவட்டத்தில் இது அதிகமாக உள்ளது.


கடந்த மாதம் தேடப்படும் பட்டியலில் உள்ள வேலூர் மாநகரை சேர்ந்த ரவுடிகளோடு சேர்ந்து வேலூர் மாநகரில் பணியாற்றும் காவல்துறை எஸ்.ஐ ஓருவர் இரவில் நடுரோட்டில் கேக் வெட்டி தனது பிறந்த நாளை அந்த அதிகாரி கொண்டாடியுள்ளார். அந்த ரவுடி அதிகாரிக்கு கேக் ஊட்டியுள்ளார். இது இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியாகி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அதிகாரி மட்டுமல்ல சில அதிகாரிகள், ரவுடிகளுக்கு துப்பு தந்து தப்பிக்க வைப்பது, காப்பாற்றுவது என காவல்துறையில் பல கறுப்பாடுகள் உள்ளனர். இவர்களை எந்த அதிகாரிகளும் ஒடுக்குவதில்லை. புதியதாக வந்துள்ள இந்த அதிகாரியாவது தடுப்பாரா ?, குற்றங்களை குறைத்து மீண்டும் அமைதி மாவட்டம் என பெயரெடுக்க வைப்பாரா என சமூக ஆர்வலர்கள் பலரும் எதிர்பார்க்கின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT