வேலூர் மாவட்டம், காட்பாடி ரயில்வே நிலையத்தில் ரயில்வே போலீசார் செப்டம்பர் 16ந்தேதி இரவு 08.00 மணியளவில் ரயில் நிலையத்தில் தீவிர ரோந்து சென்றனர். அப்போது ரயில் நிலையத்தின் இரண்டாவது பிளாட்பார்மில் ஒரு இடத்தில் டிராவல் பேக்குகள் 20- க்கும் மேற்பட்ட பெரிய கறுப்பு பேக்குகள் இருந்தன. அதனைப்பார்த்து அது என்னவென அங்கிருந்தவர்களிடம் கேட்க, யாரும் இது தங்களது என உரிமை கோரவில்லை. அதன் பின்னர் அந்த பைகளை சோதனை செய்தபோது, விலை உயர்ந்த வெளிநாட்டு சிகரெட் பாக்கெட் பெட்டிகள் இருந்ததை பார்த்து ஆச்சரியமடைந்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/WhatsApp Image 2019-09-16 at 19.20.36.jpeg)
பின்னர் அதனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதன் மொத்த மதிப்பு 50 லட்சம் இருக்கும் என மதிப்பிட்டுள்ளது. வரிகளுக்கு பயந்து கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்ய இதனை கொண்டு வந்துயிருக்கலாம் என சந்தேகப்படுகின்றனர் ரயில்வே போலீசார்.
  
 Follow Us