தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு தாலுக்காவிலும் உள்ள வேளாண்மை துறை சார்பில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளோடு சேர்ந்து தாலுக்கா அளவிலான விவசாய குறை தீர்வு கூட்டம் நடத்துவார்கள்.
அதேபோல், வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளியில் வருவாய் துறை, வேளாண் துறை இணைந்து விவசாயிகள் குறைதீர்ப்பு சிறப்பு கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த கூட்டத்திற்கு அதிகாரிகள் யாரும் வரவில்லை. நீண்ட நேரம் காத்திருந்த விவசாயிகள், பொதுமக்கல் கோபமாகி, தங்களது எதிர்ப்பை காட்டும் விதமாக அருகில் இருந்த ஒரு வீட்டில் இருந்து பசுமாட்டை ஓட்டி வந்து அதனிடம் மனுக்கொடுத்துவிட்டு, அதிகாரிகளுக்கு எதிராக கோஷம் எழுப்பிவிட்டு சென்றனர்.
இந்த தகவல் மாவட்டத்தின் உயர் அதிகாரிகளுக்கு தெரியவர தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.