Skip to main content

பாலத்தில் இருந்து இறக்கப்பட்ட சடலம்; சாதி பிரச்சனையா ? உண்மை என்ன ?

Published on 23/08/2019 | Edited on 23/08/2019

 

வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த புத்துகோயில் பகுதியை சேர்ந்தவர் குப்பன். இவரது அக்காவை திருமணம் செய்து தந்த ஊர் நாராயணபுரம். அதே நாராயணபுரத்தில் உள்ள ஒரு பெண்ணையே குப்பன் திருமணம் செய்துக்கொண்டு, நாராயணபுரத்திலேயே மாமியார் வீட்டிலேயே தங்கிவிட்டார்.

 

t

 

இவர் கடந்த 18ந்தேதி ஒரு விபத்தில் இறந்துள்ளார். இவரது உறவினர்கள் உடலை எரிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யும்போது சர்ச்சை ஏற்பட்டுள்ளது. மற்றொரு ஊர்க்காரன் உடலை நம் ஊர் சுடுக்காட்டில் எப்படி எரிக்கலாம் என கேள்வி எழுந்ததாக கூறப்படுகிறது. இந்த பிரச்சனையில் வழக்கமான சுடுகாட்டில் எரிக்க வசதியில்லை எனச்சொன்னதாக தெரிகிறது. இதனால் பாலாற்றங்கரையோரம் பிரச்சனைக்குரிய இறப்புகள் மற்றும் எரியூட்ட அரசின் அதிகாரபூர்வமற்ற சுடுகாடு உள்ளது. அங்கு உடலை எரிக்க கொண்டு வந்துள்ளனர்.

 

ஆற்றங்கரைக்கு செல்ல வேண்டும் என்றால் சக்கரவர்த்தி என்பவருக்குச் சொந்தமான நிலத்தின் வழியாக அல்லது யுவராஜ் என்பவருக்குச் சொந்தமான நிலத்தின் வழியாக தான் செல்ல வேண்டும். ஊருக்குள் சர்ச்சை வந்ததால் இவர்கள் இருவரும் குப்பன் உடலை எடுத்துச்செல்ல அனுமதிக்கவில்லையாம். இதனால் பாலத்தில் இருந்து கயிறு கட்டி ஆற்றில் இறக்கி கொண்டு சென்று எரித்துள்ளனர்.

t

 

இந்த விவகாரம் வெளியே வராமல் பாலத்தில் இருந்து உடலை கீழே இறக்கிய வீடியோ மட்டும் சமூக வளைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தின் பின்னணி தெரியாமல் சாதிக்கொடுமை, சுடுகாட்டு பாதை ஆக்ரமிப்பு என பலவாறு செய்திகள் வெளியாகின. இதனால் மாவட்ட நிர்வாகத்துக்கு நெருக்கடி ஏற்பட்டன. உடனடியாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவின் பேரில் வாணியம்பாடி வட்டாசியர் முருகன், துணை கண்காணிப்பாளர் முரளி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த கிராமத்துக்கு நேரடியாக சென்று விசாரித்தனர்.

 

நாராயணபுரம் கிராமத்தில் வசிக்கும் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு, ஆந்திர எல்லைப் பகுதியில் உள்ள ஒரு இடத்தைப் சுடுகாடாக பயன்படுத்தி வந்துள்ளனர். பலர் அந்த இடத்தை பயன்படுத்திவந்தாலும், சிலர் பாலாற்றங்கரையோரம் கொண்டு சென்று அடக்கம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதற்கு காரணம், இடப்பற்றாக்குறை, தூரம் என காரணம் கூறி வந்துள்ளனர். அப்படி செல்பவர்களுக்கு நிலத்தின் உரிமையாளர்களும் வழி விட்டுள்ளனர். தற்போது இறந்த குப்பன் ஆதிதிராவிடர், தங்களது சொந்த நிலத்தின் வழியாக கொண்டு செல்ல வழிவிட மறுத்தவர்களும் ஆதிதிராவிடர்கள் என்பது குறிப்பிடதக்கது.

 

இதனையெல்லாம் அறிந்துக்கொண்ட அதிகாரிகள் மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் யோசனைப்படி இரண்டு இடங்களை ஆய்வு செய்த அதிகாரிகள் பாலாற்றங்கரையை யாரும் பயன்படுத்தக்கூடாது எனச்சொல்லி இடுகாட்டுக்காக, வேறொரு இடத்தில் 50 சென்ட் நிலம் ஒதுக்கி விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

 

இந்த விவகாரத்தின் ஒருபகுதியாக சென்னை உயர்நீதிமன்றம் தானே முன்வந்து வழக்கை பதிவு செய்து வேலூர் மாவட்ட ஆட்சியருக்கு முழு விசாரணை அறிக்கை தாங்கள் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடதக்கது. 

சார்ந்த செய்திகள்